» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேர்தல் செலவுக்காக ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற மத்திய அரசு முயற்சி - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

வெள்ளி 9, நவம்பர் 2018 11:39:19 AM (IST)

ரிசர்வ் வங்கியில் இருந்து தேர்தலுக்காக பணம் கேட்டு மத்திய அரசு அழுத்தம் கொடுத்துவருவதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தேர்தல் செலவுகளுக்காக 1 லட்சம் கோடி ரூபாய் பணத்தை ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறியுள்ளார். 

மேலும், தனக்கு வேண்டிய நபர்களை ரிசர்வ் வங்கியின் முக்கிய பதவிகளில் மத்திய அரசு பணி அமர்த்தி இருப்பதாகவும், அதன் மூலம் வரும் 19-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தனக்கு சாதகமான முடிவுகளை எடுக்க வைத்து, ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற பா.ஜ.க. அரசு முயல்கிறது.  இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் பணம் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டுள்ளதாகவும், இந்த நிபந்தனைகளில்  எது நடந்தாலும் அது ரிசர்வ் வங்கியின் புனிதத்தை சீர்குலைக்கும் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

crescentopticals

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD








Thoothukudi Business Directory