» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆர்பிஐ-யிடம் ரூ.3.6 லட்சம் கோடியை கட்டாயப்படுத்தி பெற நினைக்கிறது மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு

வியாழன் 8, நவம்பர் 2018 4:38:44 PM (IST)

ஆர்பிஐ-யிடம் இருந்து ரூ.3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கட்டாயப்படுத்தி பெற நினைக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டு, இப்போது அதனை சரி செய்வதற்காக மத்திய ரிசர்வ் வங்கியிடம் (ஆர்பிஐ) இருந்து ரூ.3.6 லட்சம் கோடியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கோரியுள்ளது இந்த சூழ்நிலையில் ஆர்பிஐ கவர்னர் தைரியமாக எழுந்து நின்று மோடிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்; தேசத்தின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் மேலும் கூறியிருப்பதாவது: தங்களுடைய தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும், முடிவுகளாலும் மத்திய அரசு நாட்டின் நிதி நிலையை மோசமாக்கிவிட்டது. இப்போது, அதனைச் சமாளிப்பதற்காக ரூ.3.6 லட்சம் கோடியை ஆர்பிஐ அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது ஆர்பிஐ வைத்துள்ள ரொக்க இருப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். இப்படி ஆர்பிஐ-யிடம் இருந்து கட்டாயப்படுத்தி பணத்தைப் பெற நினைப்பதால்தான் மத்திய அரசுக்கும், ஆர்பிஐ-க்கும் இடையே பிரச்னை ஏற்படுள்ளது.

மத்திய அரசு தவறான நடவடிக்கைகள் மூலம் நாட்டின் நிதி நிலையை மோசமாக்கிவிட்டு, அதனை சரி செய்ய ஆர்பிஐ பணத்தை கோருவது எத்தகைய முடிவு என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் ஆர்பிஐ கவர்னர் துணிவுடன் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அவர் தேசத்தின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்று ராகுல் தனது பதிவில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals


CSC Computer Education

New Shape Tailors





Thoothukudi Business Directory