» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உ.பி.யில் 3 வயது குழந்தை வாயில் அணுகுண்டு வெடித்த கொடூரன்: சிறுமி உயிருக்கு ஊசல்!!

வியாழன் 8, நவம்பர் 2018 3:51:17 PM (IST)

மீரட் நகரில் 3 வயது குழந்தை வாயில், அணுகுண்டு பட்டாசு வைத்து இளைஞர் ஒருவர் வெடித்துள்ளார். பட்டாசு வெடித்துப் படுகாயமடைந்துள்ள சிறுமி, வாயில் 50 தையல்கள் போடப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகர் அருகே மிலாக் கிராமத்தைச் சேர்ந்தவர் சசி குமார். வடமாநிலங்களில் நேற்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டதையடுத்து சசி குமாரின் 3 வயது மகள் தவுராலா சாலையில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஹர்பால் என்ற இளைஞர் சிறுமியை அழைத்து அவரின் வாயில் ‘சுல்டி’ பட்டாசு வைத்து வெடித்துள்ளார்.

பட்டாசு வெடித்ததும், சிறுமியின் வாய் கிழிந்து ரத்தம் கொட்டியதில் அலறித்துடித்தார். இதையடுத்து, சிறுமியின் தந்தை சசிகுமார், சிறுமியைத் தூக்கிக்கொண்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். சிறுமிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரின் வாயில் 50க்கும் மேற்பட்ட தையல்கள் போட்டுள்ளனர். இருந்தபோதிலும், சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் கொடூர செயலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள ஹர்பாலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து

kamalakannanNov 10, 2018 - 12:28:33 PM | Posted IP 172.6*****

sarida

ஒருவன்Nov 9, 2018 - 02:18:30 PM | Posted IP 141.1*****

வடை நட்டு காரன் எல்லாம் முட்டாள் ..

tamilanNov 9, 2018 - 04:02:42 AM | Posted IP 162.1*****

அந்த நாயின் வாயில் தூப்பாக்கியால் சூட வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Anbu Communications

Joseph MarketingNalam Pasumaiyagam

New Shape Tailors


Black Forest CakesThoothukudi Business Directory