» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை தீர்ப்பு விவகாரம்: கேரள அமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் விரட்டியடிப்பு!!

வெள்ளி 12, அக்டோபர் 2018 12:55:10 PM (IST)

சபரிமலைக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பாஜக இளைஞரணியினர் அந்த மாநில தேவஸ்வம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இல்லத்தை நோக்கி நேற்று பேரணி சென்றனர். 

அங்கிருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு இளைஞரணியினர் முன்னேறியபோது வன்முறை ஏற்பட்டது. பின்னர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் அவர்களை போலீஸார் விரட்டி அடித்தனர். கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை சீர்குலைக்கும் நோக்கில், சபரிமலை விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸும், பாஜகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன என்று அந்த முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சபரிமலை விவகாரத்தை முன்வைத்து முதல்வரை அவமதிப்பது, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவது, அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனின் பாதுகாப்புக்குச் சென்ற வாகனங்களை இடைமறிப்பது ஆகியவை கேரள அரசை நிலைகுலையச் செய்யும் நோக்கில் நடப்பவை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்தில் சிறப்பான நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அரசை பாராட்டி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், அரசை வசைபாடுவதற்காக சபரிமலை விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்துள்ளன.

எதிர்க்கட்சிகள் பரப்பி வரும் பொய் பிரசாரம் குறித்து 14 மாவட்டங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடத்தி இடதுசாரி ஜனநாயக முன்னணி தலைவர்கள் விளக்கம் அளிப்பார்கள். வரும் 16-ஆம் தேதி பத்தனம்திட்டாவிலும், வரும் 24-ஆம் தேதி கொல்லத்திலும் முதல்வர் பினராயி விஜயன் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசால் நிராகரிக்க முடியாது. உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்றார். இதனிடையே, ஆலப்புழை மாவட்டம், நூர்னத் நகரில் சபரிமலையைப் பாதுகாப்போம் என்ற பெயரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று கேரள பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை உரை நிகழ்த்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


Joseph Marketing

crescentopticals

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory