» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடக கல்வி அமைச்சர் திடீர் ராஜினாமா: குமாரசாமி கூட்டணி ஆட்சிக்கு சிக்கல்?

வெள்ளி 12, அக்டோபர் 2018 11:10:42 AM (IST)

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசின் கூட்டணி கட்சியில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த கல்வி அமைச்சர் மகேஷ் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங். கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. குமாரசாமி முதல்வராக உள்ளார். கூட்டணியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த .மகேஷ் என்பவருக்கு கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் மகஷ் அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். 

காங்கிரஸ் மாயாவதி இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், தற்போது கர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் திடீரென பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த காரணங்களால் பதவியை ராஜினாமா செய்வதாக தனது கடிதத்தில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த 4 மாதங்கள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக குமாரசாமிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த திடீர் ராஜினாமா குறித்து முதல்வர் குமாரசாமி கூறியது, ராஜினாமா முடிவுக்கு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications

New Shape Tailors

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory