» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

செவ்வாய் 9, அக்டோபர் 2018 12:53:39 PM (IST)

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் சங்கம் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஷைலஜா விஜயன் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்தவர்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல. எனவே அவர்கள் மனு மீது விசாரணை நடத்தி தீர்ப்பு தர வேண்டிய அவசியம் இல்லை. கோயில் சம்பிரதாயங்கள் தொடர்பாக முறையிடுவதற்கு பக்தர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது.

சபரிமலை கோயிலில் பல ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது. மத நம்பிக்கை விவகாரங்களில் அரசியல் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது பக்தர்களின் தரப்பை கேட்கவில்லை. பக்தர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. ஆனால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பட்டியலிடப்பட்டு வழக்கமான முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

சாமிOct 12, 2018 - 02:04:58 PM | Posted IP 141.1*****

இந்தியா முழுதும் கொந்தளித்தால்தான் விசாரிப்பார்களா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals



Thoothukudi Business Directory