» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை முந்தைய அரசு தீவிரம் காட்டவில்லை: பிரதமர் மோடி பேச்சு

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 4:29:13 PM (IST)



எத்தனால் மூலம் இந்தியா ரூ12, ஆயிரம் கோடி இறக்குமதி சேமிக்கப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார். 

உலக உயிரி எரிபொருள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: "அனைத்து வேளாண் கழிவுகளையும் எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். குப்பைகளில் இருந்து இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பெட்ரோலுடன் எத்தனாலை 2022க்குள் 10 சதவீதமும், 2030க்குள் 20 சதவீதமும் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

எத்தனால் கலப்பு திட்டத்தை முந்தைய அரசாங்கங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது அதன் உற்பத்தி 141 கோடி லிட்டர் அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கும். ரூ12,000 கோடி இறக்குமதியை சேமித்து உள்ளது. வாஜ்பாய் அரசாங்கத்தின் போது எத்தனோல் கலத்தல் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் முந்தைய அரசாங்கங்கள் எத்தனால் திட்டத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை" என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Joseph Marketing


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory