» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உச்சபட்ச வீழ்ச்சி: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு

வெள்ளி 20, ஜூலை 2018 12:19:16 PM (IST)

சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் தொடர்ந்து 3வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது.

அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து வருவதன் எதிரொலியாக இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து 69.12 ஆக உள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 69.05 ஆக இருந்தது. 

இதற்கு முன் ஜூன் 28ம் தேதி ரூபாய் மதிப்பு 69.10ஐ எட்டியதே உச்சபட்ச வீழ்ச்சியாக கருதப்பட்டது. இந்நிலையில் இதனை முறியடிக்கும் வகையில் இன்று ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து 69.12 என்ற நிலையை எட்டி உள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் 71.68 புள்ளிகள் உயர்வு, அல்லது 0.20 சதவீதம்,   ஆரம்ப வர்த்தகத்தில் இன்று 36,422.91 ஆக இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads



crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Joseph Marketing

New Shape Tailors



Thoothukudi Business Directory