» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு : சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

வெள்ளி 20, ஜூலை 2018 12:12:16 PM (IST)

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், மழைக்கால கூட்டத்தொடராவது சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி, நாட்டு மக்களிடம் எழுந்து உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன் தினம் (ஜூலை 18) தொடங்கியது. அவை துவங்கிய முதல் நாளே, மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி தெலுங்கு தேசம் கட்சி சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் அளித்தது. 

தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது, அனைத்து தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.  

விவாதத்தில் கலந்து கொள்ள கட்சிகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை தெலுங்கு தேசம் துவங்கி பேசியது.  விவாதத்திற்கு பிறகு, இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று மக்களவை சபாநயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். 

இதற்கிடையே, மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தை புறக்கணித்து பிஜூ ஜனதா தள கட்சி எம்.பிக்கள் 19 பேர் வெளிநடப்பு செய்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி எம்.பிக்கள் இன்று மக்களவை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தாலும்கூட, அது ஓட்டெடுப்பில் வெற்றி பெறாது என்பதை சபையில் தற்போது உள்ள கட்சிகளின் பலம் தெளிவாக காட்டுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape TailorsFriends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticalsJoseph MarketingThoothukudi Business Directory