» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் திடீர் திருப்பம்: மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சிவசேனா முடிவு

வியாழன் 19, ஜூலை 2018 4:20:31 PM (IST)

மக்களவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு சிவசேனா முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தது.

இதன்படி, தெலங்கு தேசம் கட்சி எம்.பி. கேசினேனி சீனிவாஸ் ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ் அளித்திருந்திருந்தார். அதை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அதன்படி மக்களவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்து பின்னர் குரல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

தீர்மானத்தை தோற்கடிக்க ஆளும் பாஜக தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம் எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ய அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு வருகின்றன. பாஜக தலைவர் அமித் ஷா கூட்டணி கட்சித் தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார். உத்தவ் தாக்கரேவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.

இதேபோல் எந்த அணியையும் சாராத அதிமுக, பிஜூ ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி ஆகிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க இருதரப்பிலும் முயற்சி மேற்கொள்ளப்ப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களிக்கப்போவதில்லை என மேட்டூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சூசகமாக தெரிவித்துள்ளார். எனவே அக்கட்சி வாக்கெடுப்பை புறக்கணிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோலவே பிஜூ ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி ஆகிய கட்சிகளும் வாக்கெடுப்பை புறக்கணிக்க கூடும் என கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer EducationJoseph Marketing

Nalam Pasumaiyagam

New Shape Tailors

Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory