» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய அரசாங்க அமைப்புகளை பிரதமர் மோடி சீர்குலைத்து வருகிறார்: ராகுல் குற்றச்சாட்டு

புதன் 13, ஜூன் 2018 5:50:58 PM (IST)

பிரதமர் மோடி, இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசாங்க அமைப்புகளை சீர்குலைத்து வருகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.

மகாராஷ்டிரத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் அரசு மக்களின் நலனில் இல்லாமல் செல்வந்தர்களின் நலனுக்காக செயல்படுகிறது. இதனால் சாமானியனின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பில் கொண்டு வருமாறு எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருந்தாலும் பாஜக-வுக்கு அதில் விருப்பமில்லை.

பாஜகவின் இந்த புதி வரிவிதிப்பு முறைகளால் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் அவர்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசாங்க அமைப்புகளை சீர்குலைத்து வருகிறார். இது மிகவும் தவறானது. பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாக உள்ளது என்றார்.


மக்கள் கருத்து

உண்மை தமிழன்Jun 16, 2018 - 02:17:34 PM | Posted IP 117.2*****

உங்க பாட்டி என்ன செஞ்சாங்க - தெரிசவங்ககிட்ட கேளுப்பா சின்னத்தம்பி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


crescentopticals






Thoothukudi Business Directory