» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காவிரி மேலாண்மை வாரியத்துக்கே அதிகாரம்: மத்திய அரசை அணுகத் தேவையில்லை - உச்ச நீதிமன்றம்

புதன் 16, மே 2018 5:21:25 PM (IST)

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இறுதி தீர்ப்பில் கூறியுள்ளபடி அமைக்கப்படும் காவிரி நிதிநீர் மேலாண்மை வாரியத்துக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு, மத்திய அரசை அணுகத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இறுதித் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இரு முறை அவகாசம் கேட்டநிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேற்று முன்தினம் 14 பக்க வரைவு செயல் திட்டத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையைப் படித்து 4 மாநிலங்களும் 16-ம் தேதிக்குள் தங்களின் கருத்தை தெரிவிக்கவேண்டும் எனத் தெரிவித்து இருந்தது.

அதன்படி காவிரி வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அதன்பின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி 16-ம் தேதி காவிரி இறுதித்தீர்ப்பை மத்திய அரசு நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இறுதித் தீர்ப்பின்படி காவிரி நிதிநீர் பங்கீட்டை செயல்படுத்தும் அமைப்புக்குத்தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது, இறுதிமுடிவும் காவிரி வாரியமே எடுக்க முடியும் மத்திய அரசுக்கு கிடையாது.

காவிரிநீர் பிடிப்புப் பகுதிகளில் கர்நாடமும், தமிழகமும், காவிரி மேலாண்மை அமைப்பின் அனுமதியின்றி எந்தவிதமான தடுப்பணைகளையும், அணைகளும் கட்ட இயலாது. இதுதொடர்பாக மாநில அரசுகள் மத்திய அரசை அணுகத் தேவையில்லை. காவிரி மேலாண்மை அமைப்பின் முடிவே இறுதியானது. அணைகளில் இருந்து நீர் திறக்கும் அதிகாரம் அனைத்தும் காவிரி நதிநீர் மேலாண்மை அமைப்பிடமே இருக்கும்.

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் இல்லாமல், டெல்லியில் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நீதிமன்றமும் ஏற்கிறது. அந்த அலுவலகத்தின் அன்றாக அலுவலகப் பணிகள், அறிக்கைகள் அளிக்கும் நிர்வாகரீதியான அலுவலகம் பெங்களூருவில் செயல்படலாம். அதேபோல, தமிழகத்தின் கோரிக்கையின்படி, காவிரி மேலாண்மை அமைப்பு என்பதற்கு பதிலாக காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயரோடு அழைக்கலாம்.

அதேசமயம், தமிழகத்தின் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இந்த திருத்தங்களை மத்திய அரசு செய்து நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். நாளை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

crescentopticals




Joseph Marketing





Thoothukudi Business Directory