» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மக்களை வேவு பார்க்க செட்-டாப் பாக்ஸ் கருவியில் சிப் பொருத்த திட்டம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 11:06:58 AM (IST)
செட்-டாப் பாக்ஸ் கருவியில் சிப் பொருத்துவது, நாட்டு மக்களை வேவு பார்க்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு தொலைக்காட்சியையும் எவ்வளவு பேர் காண்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக ஊர்ஜிதப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டமானது, விளம்பரதாரர்கள், விளம்பர இயக்குநரகம் ஆகியவைகளுக்கு, எந்தத் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யலாம் என்பது தொடர்பான முடிவை எடுக்க உதவியாக இருக்கும் என்றார்.
இந்நிலையில், மத்திய அரசு முன்வைத்துள்ள இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக சுட்டுரையில் அக்கட்சியின் மக்கள் தொடர்புப் பிரிவு துறை தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாட்டு மக்களை வேவு பார்க்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை வெட்டவெளிச்சமாகியுள்ளது.
தனிநபர் ரகசியத்தில் தலையிடும் நடவடிக்கையாக, 4 சுவர்களைக் கொண்ட படுக்கை அறைகளில், தொலைக்காட்சி பெட்டிகளில் எந்த நிகழ்ச்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விரும்புகிறார். மத்தியில் ஆளும் மோடி அரசானது, வேவு பார்க்கும் அரசாகும். மத்திய அரசானது, தனிநபர் ரகசியம் தொடர்பான உரிமையை சுக்குநூறாக்கி விட்டது என்று ரன்தீப் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதியம் முடக்கப்பட்ட இந்திய உச்சநீதிமன்றத்தின் இணையதளம் மீட்கப்பட்டது
வியாழன் 19, ஏப்ரல் 2018 7:40:53 PM (IST)

ஐபிஎல் போட்டியைக் காண புனேவுக்கு சிறப்பு ரயிலில் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்
வியாழன் 19, ஏப்ரல் 2018 3:34:21 PM (IST)

நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
வியாழன் 19, ஏப்ரல் 2018 12:53:12 PM (IST)

குஜராத்தில் ரூ.2,654 கோடி கடன் மோசடி தொடர்பாக தொழிலதிபர் - மகன்கள் கைது: சிபிஐ நடவடிக்கை
வியாழன் 19, ஏப்ரல் 2018 11:03:45 AM (IST)

நாடு முழுவதும் அட்சய திருதியை அன்று தங்கம் விற்பனை 25% அதிகரிப்பு: சிஏஐடி தகவல்
வியாழன் 19, ஏப்ரல் 2018 10:32:49 AM (IST)

பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கின் கண்கள் கட்டப்பட்டுள்ளது: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு
புதன் 18, ஏப்ரல் 2018 5:36:48 PM (IST)

makkalApr 18, 2018 - 11:34:28 AM | Posted IP 162.1*****