» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காவிரி விவகாரத்தில் பாஜகவால் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படாது: முரளிதர் ராவ் பேட்டி

திங்கள் 16, ஏப்ரல் 2018 5:44:59 PM (IST)

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது என பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் கூறினார்.

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஆனால், தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாத காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.

கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. காய்நகர்த்தி வருவதாகவும், காவிரி பிரச்சினையை இழுத்தடிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார்.

‘காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது. இதுகுறித்து கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம்’ என்றார். இதையடுத்து கர்நாடகாவுக்கு ஆதரவாக முரளிதர ராவ் பேசியது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Joseph Marketing

New Shape Tailors




Thoothukudi Business Directory