» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சுயநல அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் காவிரி பிரச்சனை தீரவில்லை: பிரகாஷ் ராஜ் ட்வீட்
திங்கள் 16, ஏப்ரல் 2018 12:18:16 PM (IST)
ஓட்டுக்காக அரசியல் செய்யும் சுயநலவாதிகளின் சூழ்ச்சியால் காவிரி பிரச்சனைக்கு இன்னும் தீர்வு ஏற்படவில்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையில் அரசாங்கங்கள் கண்ணாமூச்சி ஆடுவது மக்களை ஏமாற்றும் செயல். ஓட்டுக்காக அரசியல் செய்யும் சுயநலவாதிகளின் சூழ்ச்சியை காவிரியால் கடக்கவே முடியவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகிற கட்சிகள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக மக்களைப் பிரித்து மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றனர்.அரசியல் தலைவர்கள் தீர்வு தேடுவதில் அக்கறை காட்டாமல் உணர்ச்சிகளைத் தூண்டி கலவரம் செய்து குழம்பிய குட்டையில் அதிகார மீன்களை பிடிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
காவிரியை வைத்து கலவரம் செய்கிறவர்கள் யாரும் காவிரி ஆற்றில் மணல் அள்ளும் மாஃபியாக்களுக்கு எதிராக சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடுவதில்லை. இனிமேலும் இந்த நதிநீர் அரசியல் தொடர்ந்தால் அது மீட்க முடியாத இழப்புகளைத் தரும் பேராபத்தில் முடியும்.கேள்வி மட்டுமே கேட்டுக்கொண்டிருக்காமல் தீர்வு தேடுகிற ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவதும் அவசியமாகிறது. காவிரி நீர் பங்கீட்டில் இருக்கும் உண்மையான பிரச்சனைகளையும், அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளையும் தமிழக மற்றும் கர்நாடக மக்களுக்கு விளக்குவது அவசியமாகிறது.
இரு தரப்பிலும் சமூக அக்கறை கொண்ட வல்லுநர்களின் துணையுடன் ஒரு ஆவணப்படம் எடுக்கும் முயற்சியை Just asking Foundation எடுக்கிறது. உண்மைகள் மக்களைச் சேர அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம். ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்பார்கள். ஒரு நதிநீரைக் குடித்து, அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வதும் முறையல்ல. தாய்ப்பாலும் நதிநீரும் வேறு வேறல்ல. நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரியாகும்” என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதியம் முடக்கப்பட்ட இந்திய உச்சநீதிமன்றத்தின் இணையதளம் மீட்கப்பட்டது
வியாழன் 19, ஏப்ரல் 2018 7:40:53 PM (IST)

ஐபிஎல் போட்டியைக் காண புனேவுக்கு சிறப்பு ரயிலில் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்
வியாழன் 19, ஏப்ரல் 2018 3:34:21 PM (IST)

நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
வியாழன் 19, ஏப்ரல் 2018 12:53:12 PM (IST)

குஜராத்தில் ரூ.2,654 கோடி கடன் மோசடி தொடர்பாக தொழிலதிபர் - மகன்கள் கைது: சிபிஐ நடவடிக்கை
வியாழன் 19, ஏப்ரல் 2018 11:03:45 AM (IST)

நாடு முழுவதும் அட்சய திருதியை அன்று தங்கம் விற்பனை 25% அதிகரிப்பு: சிஏஐடி தகவல்
வியாழன் 19, ஏப்ரல் 2018 10:32:49 AM (IST)

பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கின் கண்கள் கட்டப்பட்டுள்ளது: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு
புதன் 18, ஏப்ரல் 2018 5:36:48 PM (IST)

சாமிApr 16, 2018 - 04:08:51 PM | Posted IP 162.1*****