» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய கொடூரம்: மருத்துவர்கள் மீது நடவடிக்கை!!

திங்கள் 12, மார்ச் 2018 5:40:32 PM (IST)

உத்தரப்பிரதேசத்தில் விபத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட காலை, நோயாளிக்கு தலையணையாக வைத்த சம்பவத்தில் 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி அரசு மருத்துவமனையில், ஒரு இளைஞரின் கால் துண்டிக்கப்பட்ட நிலையில், அதை அவருக்கு தலையணையாக வைத்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாகப் பரவியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்துக்கு செய்தி பறந்தது. 

உடனடியாக விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம், சம்பவத்தின் போது பணியில் இருந்த 2 மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்தும், 4 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறப்படுவதாவது: 28 வயதான ஞானஷ்யாம் என்ற இளைஞர் மிக மோசமான பேருந்து விபத்தில் சிக்கி காலில் அடிபட்டது. அவரது உயிரைக் காப்பாற்ற காலை வெட்டி எடுத்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தபோது, வெட்டி எடுத்த காலை தலையணையாக வைத்திருந்தனர்.

இதனைப் பார்த்த உறவினர்கள், ஊழியர்களிடம் பல முறை தலையணை தருமாறு கோரியும் அவர்கள் கண்டுகொள்ளாததால், அருகில் உள்ள கடைக்குச் சென்று தலையணை வாங்கி வந்து வைத்துள்ளனர். முன்னதாக காலை தலையணையாக வைத்திருந்த புகைப்படத்தை பொதுமக்கள் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்Mar 12, 2018 - 07:50:31 PM | Posted IP 157.5*****

மனசாட்சி இல்லாத செயல், மிகவும் கண்டிக்கத்தக்கது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


CSC Computer Education

New Shape TailorsJoseph Marketing

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory