» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீரில் போலீசார் மீது கல்வீச்சு நடத்திய இளம்பெண் கால்பந்து அணி கேப்டன் ஆனார்

புதன் 6, டிசம்பர் 2017 10:25:46 AM (IST)



ஜம்மு -காஷ்மீரில் போலீசார் மீது கல்வீச்சு நடத்திய இளம்பெண் பெண்கள் கால்பந்து அணி கேப்டன் ஆகியுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த வருடம் போலீசார் மீது கல்வீச்சு நடத்திய இளம்பெண் அப்ஷான் ஆசிக் (23).  இந்த சம்பவத்திற்கு பின் அவர் கால்பந்து விளையாட்டு வீராங்கனை என்பது வெளியுலகிற்கு தெரிய வந்தது. அதன்பின்னர் அவர் ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தியை சந்தித்துள்ளார்.  இதனை தொடர்ந்து மாநிலத்தில் அப்ஷான் மற்றும் பெண்கள் கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்த முப்தி முடிவு செய்துள்ளார்.

இதனால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் கோல்கீப்பர் ஆகியுள்ளார் அப்ஷான்.  தனது 22 உறுப்பினர்கள் அடங்கிய கால்பந்து அணி, பயிற்சியாளர் சத்பல் சிங் கலா ஆகியோரோடு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் அவர் நேற்று சந்தித்துள்ளார்.  இந்த சந்திப்பில் இந்திய விளையாட்டு கழகம் ஒன்றை காஷ்மீரில் தொடங்க வேண்டும் என சிங்கிடம்  அவர் கேட்டு கொண்டுள்ளார்.

கல்வீச்சு சம்பவத்திற்கு வருத்தம் அடைந்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், போலீசார் ஒருவர் தகாத வார்த்தைகளை பேசினார்.  கால்பந்து மைதான பாதுகாப்பில் ஈடுபட்ட சக உறுப்பினர் ஒருவர் அடித்து தாக்கப்பட்டார்.  அதனால் எழுந்த ஆத்திரத்தில் போலீசார் மீது கற்களை வீசி எறிந்தேன் என்றும் தன் தரப்பு நியாயத்தினை அப்ஷான் முன்வைத்துள்ளார்.


மக்கள் கருத்து

உண்மைDec 6, 2017 - 01:34:14 PM | Posted IP 122.1*****

திருந்து அல்லது திருத்த படுவாய்! ஜெய் ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


New Shape Tailors






Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing



Thoothukudi Business Directory