» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திரா நூற்றாண்டு விழாவை கொண்டாடாமல் இருப்பது நாட்டிற்கு அவமானம்: ப. சிதம்பரம்

திங்கள் 20, நவம்பர் 2017 9:20:18 AM (IST)

இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை மத்திய அரசு கொண்டாடாமல் இருப்பது அவமானம்’ என ப. சிதம்பரம் விமர்சனம் செய்தார்.
 
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவருடைய நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள். பல தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர். மும்பையில் டாடா இலக்கிய விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ‘இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாளை நினைவு கூருவோம்’ என்னும் தலைப்பில் விவாதம் நடந்தது. 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், குரோஷியா நாட்டுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் பீட்டர் கால்பிரைத் ஆகியோர் பங்கேற்றனர். விவாதத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ‘இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை மத்திய அரசு கொண்டாடாமல் இருப்பது அவமானம்’ என விமர்சனம் செய்தார். 
 
நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாளை கொண்டாடாமல் இருப்பது நாட்டுக்கும், அரசுக்கும் மிகப்பெரிய அவமானம் ஆகும். இந்திரா காந்தி பல துறைகளில் மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்தார் என்றே கருதுகிறேன். சிலவற்றில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. அவசர நிலையை பிரகடனம் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொண்டு மீண்டும் அதேபோல் செய்ய மாட்டேன் என்றும் கூறினார். பல்வேறு சவால்களை அவர் சந்திக்க நேர்ந்தது. 

மோடி தனது பொருளாதார கொள்கைகளில் தோல்வி அடைந்துவிட்டார். அதனால்தான் நான் ஏழைகளின் நண்பன் என்று நடிப்பதற்கு முயற்சித்து வருகிறார். இந்திராகாந்தியின் பிறந்தநாள் நூற்றாண்டை இந்திய அரசு கொண்டாடவில்லை. எதாவது மாநில அரசு இந்திராகாந்தியின் நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாடுகிறதா? என்பது எனக்கு தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி அவர்கள் வழியில் இந்திராகாந்தியின் நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாடி வருகிறது.

எனினும் நாடு இந்த விழாவை கொண்டாடாமல் இருப்பது ரஷிய புரட்சியை ரஷியர்கள் மறந்தது போல உள்ளது. பிரதமர் மோடி நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்க தவறிவிட்டார். மோடி தனது பொருளாதார கொள்கையில் தோல்வி அடைந்துவிட்டார். மோடி ஆட்சிக்கு வரும் முன் எல்லோருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக கூறினார். அது என்ன ஆனது என்று தெரியவில்லை. இன்னமும் சிலர் மோடியால் புதிய இந்தியா பிறக்கும் என நம்புகிறார்கள். இன்னும் 15 மாதங்கள் அவருக்கு உள்ளது. அதற்குள் அவரால் புதிய இந்தியாவை பிறக்க வைக்க முடிகிறதா? என்று பார்ப்போம் என்று பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD







Joseph Marketing



Thoothukudi Business Directory