» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் இருந்து இன்னும் எத்தனை பாகிஸ்தானை உருவாக்கப் போகிறீர்கள்? பரூக் அப்துல்லா கேள்வி

ஞாயிறு 19, நவம்பர் 2017 10:37:44 AM (IST)

"இந்தியாவில் இருந்து இன்னும் எத்தனை பாகிஸ்தானை உருவாக்கப் போகிறீர்கள்" என்று பா.ஜ.வுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்.

உ.பி.யில்  உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.வுக்கு ஓட்டுபோடாத முஸ்லிம்கள் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். நிம்மதியாக இருக்க முடியாது என்று பா.ஜ. தலைவர் ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார்.  இதற்கு பதிலடியாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். ஏற்கனவே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் அந்த நாட்டுக்கே உரியது. பாக். வசம் உள்ள காஷ்மீரை இந்தியா எடுத்துக்கொள்ளும் அளவுக்கு பாக். ஒன்றும் பலவீனமான நாடு அல்ல. அதனிடம் அணுகுண்டு இருக்கிறது என்று பரூக் அப்துல்லா கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜம்முவில் நடந்த கூட்டத்தில், பரூக் அப்துல்லா பேசியதாவது: பா.ஜ. தலைவர்கள் பேசுகிறார்கள். முஸ்லிம்களை மிரட்டுகிறார்கள்.  எங்களுக்கு (பா.ஜ.)ஓட்டு போடாவிட்டால் நிம்மதியாக வாழ முடியாது என்று முஸ்லிம்களை எச்சரிக்கிறார்கள்.  இந்த இந்தியா என்பது.. ஒவ்வொரு இந்துவுக்கும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும், ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் உரியது என்பதை உங்களுக்கு காட்டுவோம்.  மறந்து விடாதீர்கள். இந்தியாவில் இருந்து ஒரு பாகிஸ்தானை உருவாக்கினீர்கள்.  இன்னும் எத்தனை பாகிஸ்தானை உருவாக்கப் போகிறீர்கள்...  இந்தியாவை இன்னும் எத்தனை துண்டுகளாக ஆக்கப்போகிறீர்கள்...

பாக். வசம் உள்ள காஷ்மீர்அந்த நாட்டுக்கத்தான் என்று சொன்னேன். அவர்களிடம் அணுகுண்டுகள் இருக்கின்றன. எங்களை அணுகுண்டு வீசி பாக்.  கொல்வதையே நீங்கள் விரும்புகிறீர்களா..உங்களுக்கு என்ன நீங்கள் அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.. எல்லையில் நித்தம் நித்தம் குண்டு மழை பொழிகிறது.   அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிற ஏழை மக்களை நினைத்துப்பாருங்கள். இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார். இதற்கிடையில் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பரூக் அப்துல்லா பேசியதற்காக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யக் கோரி ஜம்முவில் சமூகநல ஆர்வலர் சுகேஷ் கஜூரியா என்பவர்  மனு அளித்துள்ளார்.


மக்கள் கருத்து

உண்மைNov 20, 2017 - 02:04:23 PM | Posted IP 122.1*****

போடா பிசுக்கோத்து!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals


New Shape Tailors


Joseph MarketingThoothukudi Business Directory