» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பத்மாவதி திரைப்படம் : மத்திய அமைச்சருக்கு ராஜஸ்தான் முதல்வர் முக்கிய கடிதம்

சனி 18, நவம்பர் 2017 8:41:31 PM (IST)

மாற்றம் செய்யப்பட்டால் மட்டுமே பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா,அமைச்சர் ஸ்மிரிதி இராணிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் பத்மாவதி என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார்.வருகிற டிசம்பர் 1-ந்தேதி பத்மாவதி படம் திரைக்கு வருகிறது. இதற்கிடையே பத்மாவதி படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  குஜராத்தில் சட்ட சபை தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்மாவதி படம் வெளியானால் குறிப்பிட்ட பிரிவினர் இடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பாஜக இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா கடிதம் எழுதியுள்ளார். அதில் பத்மாவதி திரைப்படத்தை வெளியிட்டால் பெரிய அளவிலான பிரச்சனைகள் ஏற்பட வாய்ய்புண்டு.மேலும் எந்த சமுதாயத்தினருடைய மனதையும் காயப்படுத்தாது என்பதை உணர்த்தும் வகையில், மாற்றம் செய்யப்பட்டால் மட்டுமே பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals

Joseph MarketingThoothukudi Business Directory