» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நண்பனுக்காக தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த கால்பந்து வீரர்: பெற்றோர் கோரிக்கையை ஏற்று சரண்

சனி 18, நவம்பர் 2017 4:02:06 PM (IST)

லஷ்கர்-இ- தெய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த கால்பந்து வீரர் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று காஷ்மீர் போலீசில்  சரணடைந்தார்

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் நகரைச் சேர்ந்தவர் இர்ஷத்கான். இவரது மகன் மஜீத் (20). பெற்றோருக்கு ஒரே மகனான இவர் காஷ்மீர் மாநில கால்பந்து வீரர் ஆவார். படிப்பிலும் கெட்டிக் காரராக திகழ்ந்தவர். இவரது தந்தை இர்ஷத்கான், தாய் ஆயிஷா இருவரும் அனந்த்நாக் பகுதியில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் அனந்த்நாக்கில் அவர்கள் பிரபலமாக செல்வாக்குடன் திகழ்கிறார்கள். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் அனந்த்நாக்கில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடந்த சண்டையில் மஜீத்தின் சிறு வயது முதல் நண்பரான யவர் நிசார் சுட்டுக் கொல்லப்பட்டார். நிசார் மரணம் காரணமாக மஜீத் மிகவும் வேதனையில் இருந்து வந்தார். பாதுகாப்புப் படை வீரர்களை கண்டித்து பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் மஜீத் வீட்டை விட்டு வெளியேறினார்.

அவரை தந்தை இர்ஷத்கான் தேடி வந்தார். ஆனால் மஜீத் என்ன ஆனார், எங்கே சென்றார் என்பது மர்மமாக இருந்தது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு மஜீத் "பேஸ்புக்”கில் தன்னைப் பற்றிய தகவல்களை வெளியிட்டார். உருது மொழியில் வெளியிடப்பட்ட அந்த தகவலில், "நான் லஷ்கர்-இ- தெய்பா இயக்கத்தில் சேர்ந்து விட்டேன். என்னைத் தேட வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

மஜீத் தன் பேஸ்புக் பக்கத்தில், ஏ.கே.47 ரக துப் பாக்கியுடன் இருக்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்ததும் மஜீத்தின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மஜீத் தீவிரவாத இயக்கத் தில் சேர்ந்து விட்ட தகவலை அறிந்தது முதல் அவர் தாய் ஆயிஷா அதிர்ச்சியில் படுத்த படுக்கையாகி விட் டார். அவரது தந்தை இர்ஷத் கான், "மகனே... அந்த பாதை சரியான பாதை அல்ல, திரும்பி வந்து விடு” என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.

மஜீத்தின் நண்பர்களும் திரும்பி வருமாறு பேஸ்புக் கில் கோரிக்கை விடுத்தனர். காஷ்மீர் உயர் போலீஸ் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் பெற்றோரின் கண்ணீர் வேண்டுதல்கள் மஜீத்திடம் மன மாற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து லஷ்கர்-இ-தொய்பா தீவிராத இயக்கத்தில் இருந்து விலக அவர் முடிவு செய்தார். அவர் காஷ்மீர் மாநில அரசு அதிகாரிகள்-போலீசார் முன்னிலையில் சரண் அடைந்தார். இதனால் அவரது பெற்றோர் - உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
New Shape TailorsJoseph Marketing

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory