» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆசியாவிலேயே பணக்காரர்கள் பட்டியல்: ரூ.2,95,680 கோடி சொத்து மதிப்புடன் அம்பானி குடும்பம் முதலிடம்!!

சனி 18, நவம்பர் 2017 3:46:02 PM (IST)

ஆசியாவிலேயே பணக்கார குடும்பங்களின் பட்டியலில் 2,95,680 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி குடும்பம்  முதல் இடத்தில் உள்ளது. 

ஆசியாவின் 50 மிகப்பெரிய பணக்கார குடும்பங்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஆசியாவின் 50 மிகப்பெரிய பணக்கார குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 200 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 699 பில்லியன் டாலர்களாக உள்ளது. 

முகேஷ் அம்பானி ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியிலில் முகேஷ் அம்பானி குடும்பம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 680 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ரூ.2,95,680 கோடி சொத்து இந்தியாவின் முன்னணி குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.1,25,400 கோடியில் இருந்து 2,95,680 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

2வது இடத்தில் சாம்சங் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த சாம்சங் குழுமத்தின் லீ குடும்பம், 40.8 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திற்கு இறங்கியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் எலெட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லீ குடும்பத்தின் சொத்து ரூ.73,920 கோடி ரூபாயில் இருந்து 2,69,280 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஹாங்காங் நிறுவனம் ஹாங்காங் நிறுவனம் அசீம் பிரேம்ஜி குடும்பம் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலில் பல இந்திய குடும்பங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 

மொத்தம் 18 இந்திய தொழிற் குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன. அசீம் பிரேம்ஜி குடும்பம் 11ஆவது இடத்திலும், ஹிந்துஜா குடும்பம் 12ஆம் இடத்திலும், மிட்டல் குடும்பம் 14ஆவது இடத்திலும், மிஸ்திரி குடும்பம் 16ஆவது இடத்திலும், பிர்லா குடும்பம் 19ஆவது இடத்திலும், கோத்ரெஜ் குடும்பம் 20ஆம் இடத்திலும் இடம் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து

சாமிNov 18, 2017 - 07:14:50 PM | Posted IP 59.96*****

சன் குரூப்பு அதையெல்லாம் தாண்டிவிட்டதாக கேள்வி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals


Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape TailorsThoothukudi Business Directory