» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நேருவின் 128-வது பிறந்தநாள்: பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங் உள்ளிட்டோர் மரியாதை

செவ்வாய் 14, நவம்பர் 2017 12:01:02 PM (IST)

நேருவின் 128-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு இன்று பிறந்த தினமாகும். நேருவின் 128வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேருவின் நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் மரியாதை செலுத்தினார். 

பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, சமூக வலைதளமான டுவிட்டரில், நேருவுக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டுவிட்டரில்,  ஜவஹர்லால் நேருவின் 128 வது பிறந்த நாளையொட்டி அவரை நினைவு கூர்வதாகவும், தேசத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது என  தெரிவித்துள்ளார்.

பண்டித ஜவஹர்லால் நேரு, ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றார். 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்த நேரு, 1964 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி உயிரிழந்தார். நேருவின் பிறந்த நாள், நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

CSC Computer Education


Johnson's Engineers

Nalam Pasumaiyagam

selvam aqua


New Shape Tailors


Universal Tiles Bazar



Thoothukudi Business Directory