» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சேது சமுத்திரத் திட்டம்: 6 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

திங்கள் 13, நவம்பர் 2017 12:52:53 PM (IST)

சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது தொடர்பாக 6 வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தொடுத்த வழக்கில், சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது தொடர்பான வழக்கில் அதிகக் கால அவகாசம் அளித்தும் மத்திய அரசு முடிவு எடுத்து அறிவிக்கவில்லை என்று சுப்ரமணியன் சுவாமி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, ராமர் பாலத்தை இடிக்காமல், சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுத்து 6 வார காலத்துக்குள் நீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், 6 வார காலத்துக்குள் முடிவு எடுத்து அறிவிக்காவிட்டால், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


Joseph Marketing




Thoothukudi Business Directory