» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஹெச். ராஜாவுக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்தில் பாஜகவுக்கும் நேரிடும்: உளவுத்துறை எச்சரிக்கை

புதன் 20, செப்டம்பர் 2017 12:55:30 PM (IST)

சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்தில் பாஜகவுக்கும் ஏற்படும் என டெல்லி தலைமைக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை அறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் சனிக்கிழமை (செப்.16) காலை 10.30 மணி அளவில் தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பள்ளிக் கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி, பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஹெச்.ராஜா 46 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இதையடுத்து ஹெச்.ராசா தோல்வியடைந்தது குறித்து மத்திய உளவுத்துறை தீவிரமாக ஆய்வு செய்துள்ளது. அதில், ஹெச். ராஜா தோற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்குப் பொறுப்பானவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். 

இதேபோன்று வரும் 2019 மக்களவை தேர்தல் மற்றும் இதர தேர்தல்களிலும் பாஜகவுக்கும் இதே அளவிலான தோல்விதான் கிடைக்கும் என டெல்லி தலைமைக்கு உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மாநிலம் முழுவதுமே அனைதத்து தரப்பினரிடையேயும் பாஜகவுக்கு எதிரான தோற்றமே உருவாகியுள்ளது. இந்தத் தோல்வியும் அதைத்தான் காட்டுகிறது எனக் குறிப்பிட்டு காட்டியுள்ளனர். இந்த அறிக்கையை மையமாக வைத்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, தனது பார்வையை தமிழகத்தின் மீது செலுத்த தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து

selvakumarSep 21, 2017 - 07:13:27 PM | Posted IP 103.2*****

தாமரை மலரும்

திலகர்Sep 20, 2017 - 07:59:20 PM | Posted IP 59.89*****

தமிழ் நாட்டில் தாமரை மலரும்

உண்மைSep 20, 2017 - 06:11:29 PM | Posted IP 122.1*****

தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த கூத்து தமிழ்நாட்டை தாண்டிவிட்டால் அனைவரது சிந்தனையும் இந்தியா மட்டுமே! மோடி அவர்களின் செங்கோல் ஆட்சியின் ஈர்ப்பால் தமிழகத்தில் தாமரை மலரும்! ஜெய் ஹிந்த்!

மனிதன்Sep 20, 2017 - 04:41:02 PM | Posted IP 117.2*****

அதிமுகவுக்கு சப்போர்ட் செய்வதை விட்டு விட்டு ஆட்சியை களியுங்கள் ..அப்புறம் திமுக மீது உள்ள குற்றங்களை மக்களிடம் எடுத்து செல்லுங்கள் சட்ட பூர்வமாக ....தாமரை மலரும் தமிழ்நாட்டில் இலை என்றால் ஹ.ராஜா க்கு ஏற்பட்ட கத்தி தமிழகம் மாத்திரம் அல்ல இந்திய முழுவதும் உங்களுக்கு கேட்ட பெயர் தான் தமிழகத்தின் உங்கள் கூத்தை வைத்து

சாமீSep 20, 2017 - 01:01:45 PM | Posted IP 59.93*****

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் - ஆனால் கைவிடமாட்டான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Universal Tiles Bazar

Johnson's Engineers

Nalam Pasumaiyagam


CSC Computer Education

Sterlite Industries (I) LtdNew Shape Tailors


selvam aquaThoothukudi Business Directory