» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் : பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் அடிக்கல் நாட்டினர்!

வியாழன் 14, செப்டம்பர் 2017 10:51:12 AM (IST)இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டப் பணிகளை பிரதமர் மோடி மற்றும்  ஜப்பான் பிரதமர் அபே அடிக்கல்லை நாட்டினர்.
 
இத்திட்டம், ஜப்பானின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், 65 சதவீத தொகையை, 0.1சதவீத வட்டியில், ஜப்பான் வழங்குகிறது. இரு நகரங்கள் இடையேயான 508 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்பட உள்ள புல்லட் ரயில், மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும். இது, 350 கி.மீ. வரை பின்னர் அதிகரிக்கப்படும். ரயில், சபர்மதி, வதோதரா உட்பட 12 ரயில்வே நிலையங்களில் நின்றுசெல்லும்.

திட்டத்தின் கல்வெட்டை ரிமோட் கன்ட்ரோல் பொத்தானை அழுத்தி இரு நாட்டு பிரதமர்களும் திறந்து வைத்தனர். முன்னதாக விழாவில் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா-ஜப்பான் நடுவேயான சகோதரத்துவத்தை பறைசாற்றும் வகையில் இத்திட்டம் உள்ளதாக தெரிவித்தார். தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டார். இப்போது மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் நாட்டின் முதல் புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்படுகிறது என்றார்.


மக்கள் கருத்து

ஒருவன்Sep 17, 2017 - 01:28:29 PM | Posted IP 117.2*****

என் பெயர் தமிழில் உள்ளது , ஜெய் குந்து என்ற வார்த்தை தமிழில் இல்லை .. நீ மூடிட்டு போ ... நாட்டில் அடிக்கடி ரயில் விபத்து நடக்குது , அதுல புல்லெட் ரெயிலாம் ... ஒரு வேலை சரியாக கவனிக்கா விட்டால் அணைத்து உயிரும் போய்டும் ஆபத்து உள்ளது...மூடிட்டு போ

உண்மைSep 15, 2017 - 05:18:01 PM | Posted IP 122.1*****

அடேய் மூடனே! நீ முதலில் தமிழ் கலாச்சாரம் பின்பற்று! உனது பெயர் குடும்பத்தாரின் பெயர்களை தமிழில் வை! தமிழ் கடவுளை வழிபடு பின்னர் தமிழ் நாடு பற்றி பேசலாம்!

ஒருவன்Sep 14, 2017 - 06:18:56 PM | Posted IP 59.96*****

உண்மை அவர்களே, கொஞ்ச நாள்ல வெயிட் பண்ணி பாருங்க .. வடை நாட்டுக்காரன் (இந்தி காரன்) பாக்கு போட்டு எச்சில் துப்பிட்டு போயிடுவான் , சீக்கிரம் அசிங்கமாகிவிடும்.. ஒழுங்கா சாதாரண ரயிலில் கழிப்பறை வசதி இல்லை , சுத்தமாக இல்லை .. அந்த நாட்டுக்காரன் எப்போவும் சுத்தமாக வச்சி இருப்பான், ஆனால் இந்திக்காரன் என்னவோ ???

உண்மைSep 14, 2017 - 04:43:15 PM | Posted IP 122.1*****

ஜெய் ஹிந்த்!

S .A .VELMURUGANSep 14, 2017 - 04:33:08 PM | Posted IP 115.2*****

ரயிலே ரயிலே புல்லெட் ரயிலே புல்லெட் மோடி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua


New Shape Tailors

Johnson's Engineers


CSC Computer Education

Universal Tiles Bazar

Sterlite Industries (I) LtdNalam PasumaiyagamThoothukudi Business Directory