» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மனைவியை பழிவாங்க சொந்த மகனை கடத்திய நடிகர் கைது - உதவிய தோழியும் சிக்கினார்

வியாழன் 14, செப்டம்பர் 2017 10:35:07 AM (IST)மனைவியை பழிவாங்க தனது சொந்த மகனையே கடத்திய போஜ்புரி நடிகரை போலீஸார் கைது செய்தனர்.

முகமத் ஷாகித், இவர் போஜ்புரி திரைப்படங்கள் மற்றும் மியூசிக் ஆல்பங்களில் நடித்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் தகராறு  ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் பிரிந்தனர். இவர்களது இரண்டு வயது மகன் தாய் முஸ்கான் பராமரிப்பில் இருந்தார். இதனையடுத்து முஸ்கான் அவரது மகனை பார்க்க ஷாகீத்தை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த ஷாகித் மனைவியை பழிவாங்க தனது சொந்த மகனையே கடத்தி உள்ளார்.

இது தொடர்பாக முஸ்கான் ஜூன் 26-ம் தேதி போலீஸில் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஷாகித் குழந்தையை கடத்தியுள்ளது தெரிய வந்தது. இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் போலீஸார் ஷாகித்தை கைது செய்துனர். குழந்தையையும் மீட்டனர். இதுகுறித்து துணை காவல்துறை ஆணையர் ரோமில் பானியா கூறியதாவது:  "முதலில்   விசாரணையில் ஷாகித் போலீஸாருக்கு ஒத்துழைத்தார். பின்னர் அவர் மாயமாகிவிட்டார். 

அதுதான் அவர் மீது சந்தேகம் ஏற்படக் காரணமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஷாகித் கைது செய்யபட்டார். விசாரணையில்  அவரது மகனை கடத்தியுள்ளது தெரிய வந்தது. இதில் அவருக்கு உதவிய அவரது தோழியும்  கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியை பழிவாங்கவே மகனைக் கடத்தியதாக ஷாகித் ஒப்புக்கொண்டுள்ளார்.  தாய் முஸ்கான்னிடம் அவரது மகன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads
Sterlite Industries (I) Ltd

New Shape Tailors

Nalam Pasumaiyagam


CSC Computer Education

Johnson's Engineers

selvam aqua

Universal Tiles BazarThoothukudi Business Directory