» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சீனா செல்ல கேரள அமைச்சருக்கு அனுமதி மறுத்தது ஏன்? மத்திய அரசு விளக்கம்

வியாழன் 14, செப்டம்பர் 2017 10:30:28 AM (IST)

சீனா செல்ல கேரள அமைச்சருக்கு அனுமதி மறுத்தது ஏன் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேந்திரன், சீனாவில் ஐ.நா. சார்பில் நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதற்கு கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அனுமதி மறுத்ததற்கான காரணம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறுகையில், ‘இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மத்திய, மாநில அமைச்சர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நெறிமுறை ஏற்பாடுகள் குறித்து தூதரகம் மூலமாக ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு சீனாவில் ஆய்வு நடத்தியபோது, கேரள அமைச்சருக்கு சீனாவில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. 

வெளிநாடுகளில் நம் நாட்டு மக்கள் கண்ணிய குறைவாக நடத்தப்படுவதை மத்திய அரசு விரும்பவில்லை. எனவே கேரள அமைச்சர் சீனா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது’ என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar




Johnson's Engineers



New Shape Tailors

selvam aqua







Thoothukudi Business Directory