» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பள்ளிகளில் வருகைப் பதிவின் போது ஜெய்ஹிந்த் என கூறவேண்டும் : மத்தியப் பிரதேச அரசு உத்தரவு

புதன் 13, செப்டம்பர் 2017 4:11:08 PM (IST)

மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகளில்  மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் போது உள்ளேன் ஐயா என்று கூறுவதற்கு பதில், ஜெய் ஹிந்த் என்று கூற வேண்டுமென மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் கொடியேற்றுவது கட்டாயம் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, ஆளும் ஷிவ்ராஜ் சிங் சௌகான் அரசு, நவம்பர் 1ம் தேதி முதல் வருகைப் பதிவின் போது மாணவர்கள் ஜெய்ஹிந்த் என்று கூறுவதையும் கட்டாயமாக்கியுள்ளது. முதல் கட்டமாக சட்னா மாவட்டப் பள்ளிகளில் இந்த திட்டம் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

இது குறித்து அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விஜய் ஷா கூறுகையில், நாட்டுப் பற்றை மாணவர்களிடையே உருவாக்க இந்த திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை எல்லா மாணவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்பதால், அதனை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது கலாசாரம் மற்றும் பண்பாடு, நாட்டுப் பற்றை மறந்து வரும் இளைய தலைமுறைக்கு அதனை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் என்றும் ஷா கூறினார்.

இது குறித்து ஆசிரியர்கள் தரப்பில், "மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை திணிக்கவே மாநில அரசு முயல்கிறது. நமது நாட்டை நினைத்து மாணவர்கள் பெருமைப்பட வேண்டும் என்றால், பள்ளிக் கல்வியையும், வசதிகளையும் மேம்படுத்த வேண்டுமே தவிர, இதுபோன்ற விஷயங்கள் நாட்டுப்பற்றை வளர்க்காது" என்று  கருத்துக் கூறியுள்ளனர்.


மக்கள் கருத்து

உண்மைSep 14, 2017 - 05:45:30 PM | Posted IP 122.1*****

இந்தியாடா ஹிந்துஸ்தான்! ஜெய் ஹிந்த்! மூடனே வெளியேறு!

ஒருவன்Sep 13, 2017 - 09:46:07 PM | Posted IP 59.89*****

உண்மை அவர்களுக்கு நீ வடை நாட்டுக்கு சிங்கி தட்டவும் , அங்கே போய் தங்கிடு

உண்மைSep 13, 2017 - 05:10:06 PM | Posted IP 122.1*****

ஜெய் ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Johnson's Engineers

Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

selvam aqua


New Shape TailorsBlack Forest Cakes

CSC Computer Education

Pop Up HereThoothukudi Business Directory