» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சச்சினின் சுயசரிதை திரைப்படம் மே 26ல் ரிலீஸ்: மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் சச்சின்

வெள்ளி 19, மே 2017 5:26:15 PM (IST)



தனது கிரிக்கெட் வாழ்க்கைப் பற்றிய சினிமா அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, சச்சின் டெண்டுல்கர் சந்தித்துப் பேசினார்.

சிறுவனாக இருந்த சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் விளையாட்டில் நுழைந்து, இந்தியாவின் நட்சத்திர வீரராக மாறியது வரையிலான வாழ்க்கைப் போராட்டத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் மே 26ம் தேதி வெளியிடப்பட உள்ளது. திரைப்படம் வெளியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில், பிரதமர் மோடியை இன்று சச்சின் சந்தித்துப் பேசியுள்ளார்.
 
இது குறித்து சச்சின் தனது சமூக வளைதலத்தில், பிரதமர் மோடியுடனான தனது சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, விரைவில் வெளியாக உள்ள "சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்" திரைப்படம் குறித்து பேசி, அவரிடம் வாழ்த்துப் பெற்றேன் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD




crescentopticals





Thoothukudi Business Directory