» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நினைவிடம் வேண்டாம்.. மரம் நடுங்கள் : மத்திய அமைச்சரின் உயிலில் கோரிக்கை

வியாழன் 18, மே 2017 7:56:40 PM (IST)

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, உடல்நலக் குறைவால் திடீரென இன்று காலை காலமானார்.

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியைச் சேர்ந்த அனில் மாதவ் தவே, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்து வந்தார். அவருக்கு வயது 60. மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மத்திய அமைச்சராக மோடி அமைச்சரவையில் செயல்பட்டுவந்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம்  தீவிரமாக நடைபெற்றபோது,  அது தொடர்பான கோரிக்கைகளை அனில் மாதவ் தவேயிடம் தமிழக அரசு கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தவே, 2012-ம் ஆண்டு எழுதியிருக்கும் உயிலில் தன் உடல் நர்மதா ஆற்றுக் கரையில் எரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர், என் மேல் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் இருந்தால், எனக்காக எந்த இடத்திலும் நினைவிடம் எழுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நினைவிடம் கட்டுவதற்கு பதில், ஒரு மரம் நடுங்கள் போதும். என்று தன் உயிலில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals








Thoothukudi Business Directory